களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேச சபை அமர்வில் ஏற்பட்ட மோதலில் பெண் உறுப்பினர் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படம் ஒன்றை சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
புதிய கடைத்தொகுதிகளை பகிர்வது தொடர்பான யோசனையொன்றை பிரதேச சபைத் தலைவரான மஹிந்த உறுப்பினர் தேவிந்த சமர்பித்தார்.

இந்த யோசனைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன் காரணமாக பெரும் களேபரம் ஏற்பட்டதோடு இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் பிரதேச சபை கட்டடத்திற்குள்ளேயே கை கலப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது பெண் என்று கூட பார்க்காமல் அவருடைய சேலை, கைகளை பிடித்து இழுத்து அடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






