தென்னிலங்கையில் பண கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வன்முறை காரணமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொடை பிரதேசத்தில் 28 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த இளைஞன் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தம்பி பணத்தை கடனாக பெற்ற நிலையில் வெளிநாடு சென்றுள்ளார். அந்த பணத்தை பல முறை கேட்டும் திருப்பி செலுத்தாமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்தவரின் மனைவி வீட்டில் இருந்துள்ளார். கொலை செய்தவர்களை அவர் அடையாளம் கண்டுள்ளார்.
அதற்கமைய அதே பகுதியை சேர்ந்த தந்தையும் மகனுமே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்தவர்கள் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.






