தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வரை வாகன பேரணியொன்றை நடாத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த வாகன பேரணி எதிர்வரும் 26 ஆம் திகதி நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மே தின கொண்டாட்டத்திற்கு சமாந்திரமாக இந்த பேரணி அமைய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






