இலங்கையில் இருந்து முற்றாக அழியப்போகும் ஒரு தீவு…

சிலாபம் – ஆராச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்து பந்திய என்ற தீவு நீரில் மூழ்கி அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முத்து பந்திய தீவு இலங்கையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட 150 குடும்பங்கள் இந்த தீவில் வசிக்கின்றனர்.

முத்துபந்திய தீவைச் சுற்றி ஏற்படும் கடலரிப்பு காரணமாகவே இந்த தீவு அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் குறித்த தீவு மேலும் நீரில் மூழ்குவதாக புத்தளம் மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.