சிறுவர்களின் எண்ணங்கள், மனபான்மை மற்றும் நடத்தைகளை உணர்ந்து, அவர்கள் உலகை வெற்றி கொள்வதற்காக தற்போதை கல்வி முறைமையில் மாற்றம் அவசியம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெயாங்கொட சியனே தேசிய கல்விக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற 12வது தேசிய சாரணச் சிறுவர் முகாமின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தநிலையில், கல்வியியலாளர்களின் ஆலோசனைக்கேற்ப அதற்கான நிகழ்ச்சித்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், ஒழுக்கப் பண்பாடுகளினால் வளம்பெற்ற எதிர்கால தலைமுறை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு சாரணர் இயக்கம் மிகவும் முக்கியமானதாகுமென்றும் அவர் தெரிவித்தார்.






