இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கையில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை வழங்கப்படவுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே மீதிச் சம்பளத்தை நாளைய தினம் வழங்குவதற்கு நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளது.