நாளை நள்ளிரவு முதல் மின் விநியோக தடை இடம்பெறாது

மின் துண்டிப்பு நாளை நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மின்சாரத்தை தனியார் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்வதினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என்று ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்தி குறித்து குறிப்பிட்ட அமைச்சர் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது இலாபகரமானது என்றும் குறிப்பிட்டார்.

500 மெகா வோட் மின்சாரம் புதிதாக தேசிய மின் வலைப்பின்னலுடன் ஒன்றிணைப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதன் மூலம் தற்போதைய மின்வெட்டு எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் முடிந்து விடும்.எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் எந்தவித மின் வெட்டும் இருக்காது. அத்துடன் வெசாக் காலத்தில் பந்தல்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மின் துண்டிப்பு நாளை நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்ச்ர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மின்சாரத்தை தனியார் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்வதினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என்று ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்தி குறித்து குறிப்பிட்ட அமைச்சர் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது இலாபகரமானது என்றும் குறிப்பிட்டார்.500 மெகா வோhட் மின்சாரம் புதிதாக தேசிய மின் வலைப்பின்னலுடன் ஒன்றிணைப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதன் மூலம் தற்போதைய மின்வெட்டு எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் முடிந்து விடும்.எதிர்வரும் சிங்கள , தமிழ் புத்தாண்டு காலத்தில் எந்தவித மின் வெட்டும் இருக்காது. அத்துடன் வெசாக் காலத்தில் பந்தல்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். புதிதாக மூன்று அனல் மின்சார நிலையங்கள் வரவுள்ளன. அதில் இரண்டு நுரைச்சோலையிலும் திருகோணமலை பெனல் பொய்ன்டிங் ஒன்றும் வரப்போகின்றது.

இந்த மூன்று மின் நிலையங்களும் 2025 இல் அல்லது அதற்கு முன் செயற்படுத்தப்பட வேண்டும். இவை அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கிடையிலான முதலீடுகள் ஆகும். ஆனால் எந்தெந்த நாடுகள் இந்த முதலீடுகளை செய்கின்றன என்பது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. திருகோணமலை பெனல் பொய்ண்டிங் அமையவுள்ள மின்சார நிலையம் ஒவ்வொன்றும் 300 மெகா வோட் மின்சாரத்தை கொண்ட இரு அலகுகள் கொண்டதாகும்.

நுரைச்சோலையில் வரப்போகும் 2 மின் நிலையங்கள் தற்போது இருக்கும் அலகொன்றின் நீடிப்பு ஆகும். அத்துடன் அதில் ஒன்று இக்கட்டான நேரங்களில் உதவி வழங்கும் பணியை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.அதேநேரம் மின்சார உற்பத்திக்கு நீரைத் திறந்து விட மகாவலி அதிகார சபையும் மறுத்துவிட்டது. நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே மகாவலி அதிகார சபை இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.

வீட்டுப்பாவனையாளர்களுக்கான மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்று கூறிய அமைச்சர், முடிந்தால் அது 2021 ஆம் வருடமளவில் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான மோதல் இன்றைய அமைச்சரவையில் ஆராயப்பட்டு அதனைத் தீர்ப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

திதாக மூன்று அனல் மின்சார நிலையங்கள் வரவுள்ளன. அதில் இரண்டு நுரைச்சோலையிலும் திருகோணமலை பெனல் பொய்ன்டிங் ஒன்றும் வரப்போகின்றது. இந்த மூன்று மின் நிலையங்களும் 2025 இல் அல்லது அதற்கு முன் செயற்படுத்தப்பட வேண்டும். இவை அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கிடையிலான முதலீடுகள் ஆகும். ஆனால் எந்தெந்த நாடுகள் இந்த முதலீடுகளை செய்கின்றன என்பது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

திருகோணமலை பெனல் பொய்ண்டிங் அமையவுள்ள மின்சார நிலையம் ஒவ்வொன்றும் 300 மெகா வோட் மின்சாரத்தை கொண்ட இரு அலகுகள் கொண்டதாகும். நுரைச்சோலையில் வரப்போகும் 2 மின் நிலையங்கள் தற்போது இருக்கும் அலகொன்றின் நீடிப்பு ஆகும். அத்துடன் அதில் ஒன்று இக்கட்டான நேரங்களில் உதவி வழங்கும் பணியை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

அதேநேரம் மின்சார உற்பத்திக்கு நீரைத் திறந்து விட மகாவலி அதிகார சபையும் மறுத்துவிட்டது. நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே மகாவலி அதிகார சபை இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது. வீட்டுப்பாவனையாளர்களுக்கான மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்று கூறிய அமைச்சர், முடிந்தால் அது 2021 ஆம் வருடமளவில் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான மோதல் இன்றைய அமைச்சரவையில் ஆராயப்பட்டு அதனைத் தீர்ப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.