மருத்­து­வர்­க­ளின் தவறான சிகிச்சை பற்றி 100 முறைப்பாடுகள்!!

மருத்­து­வர்­க­ளின் தவறான சிகிச்சை பற்றி முறைப்பாடுகள்!!

மருத்­து­வர்­க­ளின் தவ­றான சிகிச்சை தொடர்­பில் கடந்த ஆண்­டில் மட்­டும் 100 முறைப்­பா­டு­கள் கிடைக்­கப் பெற்­றுள்­ளன என்று இலங்கை மருத்­து­வச் சபை தெரி­விக்­கி­றது.

கடந்த பல வரு­டங்­க­ளில் இது­ போன்ற 500 முறைப்­பா­டு­கள் கிடைக்­கப் பெற்­றுள்­ளன என்று இலங்கை மருத்­துவச் சபை­யின் பதி­வா­ளர் மருத் து­வர் டெரன்ஸ் காமினி சில்வா தெரி வித்தார். அதிகப்படியான நூறு முறைப்பாடுகள் கடந்த வருடமே கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: மருத்துவர்களுக்கு எதிராக இலங்கை மருத்துவ சபைக்குச் செய்யப்படும் எந்தவொரு முறைப்பாடும் சத்தியக் கடதாசி வடிவத்திலேயே செய்யப்பட வேண்டும். அவ்வாறு வரும் முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணைக்கு எடுக்கப்படும். சத்தியக் கடதாசி இன்றி வரும் முறைப்பாட்டுடன் தவறான சிகிச்சை பற்றிய பத்திரிகைச் செய்திகளை இணைத்துக்கொள்ளும் உரிமை மருத்துவ சபையின் பதிவாளர் அலுவலகத்தையே சாரும்.

நீதிமன்றங்களைப் போலவே மருத்துவச் சபையிலும் விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. முறைப்பாட்டாளர்கள் சார்பிலும் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர்களின் சார்பிலும் மருத்துவ சபையில் முற்படும் சட்டத்தரணிகள் சரியான ஒத்துழைப்பை வழங்காமையே இந்தத் தாமதத்துக்கான முக்கிய காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like