ஜிம்னாஸ்ரிக் துறையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவன்

மன்னார் – எருக்கலம்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்தினைச் சேர்ந்த மாணவன் எம்.வை. சஹிபுல் யமீன் ஜிம்னாஸ்ரிக் துறையில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் மன்னார் அல்-மினா மகா வித்தியாலயத்தில் உயர்தர கலைப்பிரிவில் கல்வி பயில்கின்றார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நடைபெற்ற ( youth with telent) போட்டியின் இறுதி சுற்றில் தேசிய ரீதியில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டதோடு,கார், மோட்டடார் சைக்கிள் மற்றும் பணப்பரிசிலினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.