மட்டகளப்பில் தொடரும் மருத்துவ கொலைகள்! வெளியாகும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள்…

மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் தொடர்ந்து பல அதிர்ச்சியூட்டும் மரணங்கள் நிகழ்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த வைத்தியசாலையில் பல நபர்களின் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதில் குறிப்பிடுபவை ஓசானம் சமுக சேவை நிலையத்தின் பொறுப்பாளரான அருட்தந்தை செற்றிக் ஜீட் ஒக்ஸ் மரணம் அடுத்து மகிழடித்தீவு தாய் சேய் மரணம் ஆகும்

பின் களுதாவளை ஆசிரியை மரணம் அதன்பின் வந்தாறுமூலை சிறுவன் மரணம் மற்றும் களுவாஞ்சிக்குடி குழந்தை மரணம் அடுத்தடுத்து நிகழ்ந்தது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அடுத்து தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு மருத்துவ கொலை அரங்கேறியுள்ளது.மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த ஜசோதா எனும் பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் தோல்வியில் முடிந்ததால் மரணம் அடைந்துள்ளார்.

மேலும் தாயுடன் சேர்ந்து சிசுவும் மரணமடைந்துள்ளதாக வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.