இறைச்சிக்காக கன்று குட்டியுடன் மாடுகளை ஏற்றிச் சென்ற கொடூரம்

சிறிய பாரவூர்தியொன்றில் இறைச்சிக்காக பல மாடுகளை ஏற்றிச் சென்ற சந்தேக நபரொருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெல்மடுல்ல நகரில் வைத்து நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த பாரவூர்தியில் 7 மாடுகளும், கன்று குட்டியொன்றும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது பாரவூர்தியில் பயணித்த இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பெல்மடுல்ல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.