இலங்கையில் பிறந்து தென்னிந்திய திரையுலகத்தை கலக்கிய பிரபல நடிகர் மரணம்! கண்ணீர் சிந்தும் மக்கள்

இலங்கையின் கண்டியில் பிறந்து ராமேஸ்வரத்திற்கு பின் குடிபெயர்ந்தார். அவர் ஜோதீஸ்வரி என்பவரை கடந்த 2007 ல் திருமணம் செய்துகொண்டார்.

அவருக்கு ஆரிக் ரோஷன் என்ற மகன் இருக்கிறார்.இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரழந்ததது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.கே ரித்திஷ் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் படத்தில் நடித்தவர். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வந்து ஹிட்டான LKG படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார்.

பிரபல கட்சியில் இருந்த ரித்திஷ் முன்பு 15 வது லோக்சபா தேர்தலில் 2009 ல் போட்டியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கட்சிக்காக நிறைய நேரம் ஒதுக்கிய அவர் வரப்போகும் நாடாளு மன்ற தேர்தலுக்காக ராமநாதபுரத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தார். மதியம் வீட்டில் உணவு சாப்பிட்டு மீண்டும் பிரச்சாரத்திற்காக கிளம்பிய போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரின் உடல் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அவருக்கு வயது 46. அவரின் மரணத்தால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like