குளிக்காத கணவன்! மனைவியின் திடீர் முடிவு…

ஒரு வாரமாக கணவன் குளிக்காத காரணத்தினால் மனைவி மணவிலக்கு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணமுறிவுக்கு பல்வேறு காரணங்கள் இருகின்றபோதும் இது ஒரு வகையான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழும் 23 வயதுப் பெண் தனது கணவன் ஒரு வாரமாகக் குளிக்கவில்லை.

அத்துடன் தாடியைச் சவரம் செய்யவில்லை என்ற காரணங்களை முன்வைத்து மணவிலக்குக் கேட்டுள்ளார். அத்துடன் கணவன் குளிக்காத நேரத்தில் வாசனைத் திரவியத்தை பயன்படுதியதாக மனைவி நீதிமன்றில் அடுக்கடுக்காகக் குற்றத்தைச் சுமத்தியுள்ளார்.

இந்த மணமுறிவுக்கு 25 வயதுடைய கணவனும் சம்மதம் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருடைய திருமணம் பெற்றோர்களது ஆசியுடன் நடைபெற்றது.

மணவிலக்கு வேண்டும் என பெண் பிடிவாதமாக இருப்பதால் பெண்ணின் வீட்டார் இது மணவிலக்கு தொடர்பில் அவசரப்பட்டு முடிவுவை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருமணம் செய்து ஓராண்டு பூர்த்தியாகியுள்ள நிலையில் இவர்கள் இருவரையும் 6 மாதங்கள் பிரிந்து வாழுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like