சாவிலும் இணைபிரியாத தமிழ் தம்பதி: கணவர் இறந்த சோகம் தாங்காமல் மனைவியும் பலி!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது,

சம்பவம் தொடர்பில் மேலும்.,

தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியில் வசித்தவர் மணி இவரது மனைவி லட்சுமி மகன் கார்த்திகேயன் (45). இருவரும் நெசவு தொழிலாளிகள்.

இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மணி நேற்றுமுன்தினம் இறந்தார். நேற்று மாலை மணி உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாடையில் தூக்கி வைத்தனர்.

பின்னர் இறுதி ஊர்வலம் தாரை தப்பட்டையுடன் புறப்பட தயாரான போது மிகவும் துக்கத்தில் இருந்த லட்சுமி, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, லட்சுமி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி லட்சுமி உயிரை விட்டது, இறுதி சடங்கில் வந்திருந்த பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like