யாரிந்த குழந்தை? இப்படி ஒரு பயங்கரமா?

யாரிந்த குழந்தை இந்த குழந்தைக்கும் அவரது ஊருக்கும் என்ன தான் சிக்கல் …?

தேர்தல் திருவிழா நேரத்தில் இதெல்லாம் கவனிக்கப்படுமா ?! …

தேர்தல் பரப்புரையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டில் சாவின் விளிம்பில் இருந்து தங்களின் அடுத்த தலைமுறையை காக்க போராடிக்கொண்டிருக்கிறது ஓர் கிராமம் என்கிறார் ஊடக நண்பர் சாதிக்…

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகில் இருக்கிற கேகே புதூர் எனும் கிராமத்தில் பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை கடந்த 12 நாட்களாக நடத்தி வருகிறார்களாம்…

போராட்ட நோக்கம் தங்களுக்கு கேன்சரையும், தோல் நோயையும், மலட்டுத் தன்மையையும் தரும் bio medical waste எரிப்பு ஆலையை இழுத்து மூட வேண்டும் என்பதுதான்.

ஓட்டுக்காக தமிழகமெங்கும் தெருத்தெருவாக அலையும் நம் அரசியல்வாதிகள் யாரும் அந்த கிராமத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்ற சூழலில் …

அந்த ஆலை ஏற்படுத்தும் கொடூரத்தின் சாட்சியாய் ஓர் இரண்டு வயது குழந்தையை அக்கிராம மக்கள் காட்டுகிறார்கள்.

குழந்தையின் உடல் முழுக்க தோல் உரிந்து பரிதாப நிலையில் தவிக்கிறது அந்த குழந்தை.”காலேஜ் கட்டப் போறோம் ன்னு சொல்லி ஏமாத்தி எங்க நிலத்தை பிடுங்கி இப்படி எங்கள் அழிக்கிறாங்களே”என கதறுகிறார் அக்குழந்தையின் தாத்தா..

ஊரில் உள்ள வீடுகள் தோறும் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள்..

எனவே தங்கள் நிலத்தை மீட்க,பெரு நோய்களிடம் இருந்து தன் எதிர்கால தலைமுறையை காக்க…

பெண்கள் களமிறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்…

தேர்தல் காலம் என்பதால் பெருமளவிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் அடக்குமுறையை ஏவிய போதும் அவற்றைத் தாண்டி தங்களின் சந்ததிகளுக்கான வாழ்வுரிமைக்கான நிலத்திற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்…

இந்த மகத்தான போராட்டத்தில் அவர்களோடு நாமும் இருப்போம்!!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like