பறக்கும் விமானத்தில் களைகட்டிய கொண்டாட்டங்கள்! தமிழர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

இலங்கையில் தமிழ், சிங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்காக பறக்கும் விமானத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் பயணித்த தமிழ் பயணிகள் உட்பட அனைவருக்கும் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கலாச்சார உணவுகளும் வழங்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலையத்திலும் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில் பெருமளவு வெளிநாட்டு பயணிகள் கலந்து கொண்டனர்.

விமானம் பறந்து கொண்டிருக்கும் போதும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களினால் புத்தாண்டு கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு பயணிகள் மகிழ்ந்து அடைந்துள்ளதுடன், இலங்கை மக்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

பெருமளவு சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் ஈர்க்கும் வகையில் சமகால இலங்கை அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like