யாழில் பற்றியெரியும் பாரிய குப்பை மேடு: வேடிக்கை பார்த்த தீயணைப்புப் படை!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு பிற்பகல்-05 மணியளவில் திடீரெனத் தீப்பற்றி எரிந்து வருவதாக தனியார் ஊடகம் ஒன்று குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும் தீயணைப்புப் பிரிவினர் தீயினைக் கட்டுப்படுத்துவதில் அசமந்தப் போக்குடன் செயற்பட்டதாக அப்பகுதிப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்ட நேரம் வரை தீ பரவுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பொதுமக்களும், வீதியால் போக்குவரத்துச் செய்வோரும் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பின்னர் பவுசர் மூலம் நீர் விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் அதுவும் மந்தகதியிலேயே முன்னெடுக்கபபடடு வருவதாகத் தெரியவருகிறது.

தீயணைப்புப் படையினரின் அசமந்தப் போக்கினால் தீயினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் குப்பை மேடு பாரிய சுவாலையுடன் எரிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.