தமிழர் தலைநகரில் கிரீஸ் பூதங்கள்? இரண்டு மாதங்களாக இரவில் இடம்பெற்ற மோசமான சம்­ப­வம்

திருகோணமலை – கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த இரண்டு மாத கால­மாக இடம் பெற்று வந்த இரவு நேர கொள்ளைச் சம்­ப­வங்­க­ளோடு தொடர்­புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நேற்று சீனக் குடா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கிரீஸ் மனி­தர்­கள் என்ற சந்­தேகத்தை ஏற்­படுத்தி பொது மக்களை அச்சம் கொள்ள செய்து கடந்த இரண்டு மாத கால­மாக இவர்கள் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த கொள்ளைக் கும்பலை, பொது மக்களின் உதவியோடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரிய கிண்ணியா , பெரியாற்றுமுனை பிரதேசங்களை சேர்ந்த 18 வயது தொடக்கம் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவிலுள்ள பணக்காரர்கள் யார் என்பதை அறிந்து இரவு வேளைகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

வீட்டின் ஓட்டை கழற்றி விட்டு வீட்­டுக்குள் இறங்கி உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து விசிறிவிட்டு நகை, பணம், மடிக் கணனி என பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சீனக்குடா பொலிஸார் குறிப்பிட்டனர்.