யாழில் பயங்கரம் – இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பலி! (படங்கள்)

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு பேர் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர்.

இதன்போது ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஏனையோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்தில், திருநாவுக்கரசு கண்ணன் வயது 48 ,கந்தசாமி மைனாவதி வயது 52 மற்றும்
ரவிக்குமார் சுதா வயது 38 ஆகியோரே பலியாகியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like