அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்!! வியக்கும் வைத்தியர்கள்

அமெரிக்காவில் வாழும் இலங்கை பெண் ஒருவர் மரணத்தை போராடி வென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

கண்டி வத்தேகமவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வாழும் ஷவினி பெர்ணான்டோ என்ற பெண்ணே இவ்வாறு மரணத்தை வென்றுள்ளார்.

அவரை அமெரிக்க வைத்தியர்கள் அதிசய பெண்மனி என்றே அழைக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஷவினி தனது நண்பர்களுடன் வில்பத்து காட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது திடீரென ஷவினியின் உடல் முழுவதும் நீல நிறமாகியுள்ளது.

சீஸ் சாப்பிட்டதனால் அவ்வாறு ஏற்பட்டிருக்கும் என நண்பர்கள் கூறினார்கள். வீட்டிற்கு வந்தவுடன் கண்டியில் உள்ள வைத்தியசாலையின் பிரதான வைத்தியரை சந்தித்துள்ளனர்.

வைத்தியரின் அறிக்கையை பார்க்கும் போது அவரது இதயத்தில் துளை இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர் இன்னும் 2 வருடங்கள் தான் வாழ்வதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

வேறு நாட்டிற்கு சென்றாலும் இந்த நிலைமையை மாற்ற முடியாதென வைத்தியர் குறிப்பிட்டார். எனக்கு கவலையாகவும் கோபமாகவும் இருந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷவினியின் தங்கை அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார். அங்கு ஷவினி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

“நான் விமானத்தில் செல்லும் போதும் ஒக்சிஜன் அணிந்தே சென்றேன். அமெரிக்காவில் அவசியமான சிகிச்சை பெற்று வந்தேன்.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது Eisenmenger’s Syndrome என்ற அரிய வகை நோய் ஒன்று தாக்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு முதல் காணப்பட்ட இதயம் தொடர்பான நோய் காரணமாக இந்த அரிய வகை நோய் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

33 வருடங்களாக இலங்கை வைத்தியர்களால் இந்த நோயை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

அமெரிக்கா சென்ற பின்னர் 6 வாரங்கள் சிகிச்சை பெற்றேன். தற்போது 2000 அடிக்கு மேல் என்னால் நடக்க முடிகின்றது.

அமெரிக்கா செல்வதற்கு முன்னர் பிரித்தானிய Portsmouth பலக்கலைகழகத்தல் பொறியியல் பட்டதாரி கற்கையை மேற்கொண்டேன். அதன் பின்னர் அவுஸ்திரேலிாவில் Edith Cowan பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றேன்.

அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பிரிவில் பட்டம் பெற்றேன்.

ஒரு நான் திடீரென மீண்டும் எனது உடல் நீளமானது. எனது மூளைக்கு செல்லும் ஒக்ஸிஜன் அளவு குறைந்து காணப்பட்டதனை என்னால் உணர முடிந்தது. 3 நிமிடங்கள் மாத்திரமே என்னால் உயிர் வாழ முடியும் என நான் உணர்ந்தேன். என்னால் முடிந்த அளவு நெஞ்சின் மீது அடித்துக் கொண்டேன். மீண்டும் மரணத்தில் இருந்து மீண்டேன்.

அன்று சிறிய ஒக்ஸிஜன் குழாய் ஒன்றுடனே சென்று வர ஆரம்பித்தேன். இந்நிலையில் எனக்கு ஒரு நாடமாடும் ஒக்ஸிஜன் ஆடை போன்று ஒன்றை தயாரிக்கும் யோசனை ஏற்பட்டு அதனை வைத்தியரிடம் கூறினேன். யாரும் அதனை முயற்சிக்கும் முன்னர் என்னை தயாரிக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

அதற்கமைய OxiWear என்ற ஒன்றை தயாரித்தேன். அது தொலைபேசியுடன் தொடர்புபடும் வகையில் தயாரிக்கப்பட்டது. யாராவது ஒருவர் ஆபத்தான நிலைக்குள்ளாகினால் நெருக்கமானவர்களுக்கு தகவல் செல்லும் வகையில் இதனை நிர்மாணித்தேன்.

அதனை தயாரித்து போட்டி ஒன்றிலும் வெற்றி பெற்று 3500 டொலர் வெற்றி பெற்றேன்.

அத்துடன் தனக்கு ஒரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளது. அதற்காக நடந்தே சென்று நிதி சேகரித்தேன். ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.