முல்லைத்தீவில் விபத்து இராணுவ பொலிஸார் ஸ்தலத்தில் பலி!

முல்லைத்தீவு 03 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ பொலிசார் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று 16.04.19 பிற்பகல் 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கி பயணித்த கன்டர் வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற உந்துருளிமீது மோத முற்பட்ட வேளை வீதியை விட்டு விலகி ஓரமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது வீதியின் ஓரமாக கடமையில் நின்ற இராணுவ பொலிசார் மீது கன்டர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

இந்த விபத்தினை ஏற்படுத்திய முள்ளியவளை குமாரபுரம் பகதியினை சேர்ந்த கன்டர் வாகனத்தின் சாரதியை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.