சீமான் பேச்சை கேட்டு கண்ணீர் விட்டு அழுத முதியவர்

தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவெடுக்கும் நாம் தமிழர்!

தமிழகத்தை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்றும், தமிழகம் தமிழர்களுக்கே என்று அரசியல் களத்தில் இறங்கினார் சீமான்.

மிகக் குறுகிய காலத்திற்குள், இளையோர்கள் மட்டத்தில் இன உணர்வையும், தமிழ் பற்றையும் விதைத்த தலைவர்களில் சீமானின் பங்கு அளப்பரியது.

ஈழத் தமிழர்களின் அரசியல் பேசு பொருளையும், ஈழப்பிரச்சினைகளையும் தொடர்ச்சியாக தன் மேடைகளில் முழங்கிவரும் சீமான், அதில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாத மனிதராக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் களம் காண்கிறது நாம் தமிழர். அதுவும் தனித்து. எந்தக் கூட்டணியும் இல்லாமல், கரும்பு விவசாயி சின்னத்தில் சீமானின் கட்சி போட்டியிடுகிறது.

நீண்ட பெரும் வரலாற்றைக் கொண்ட இருபெரும் கட்சிகளின் கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக நாம் தமிழர் கட்சி விரைவில் தன் இடத்தைப்பிடித்துக் கொள்ளும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக இருக்கின்றது.

இந்நிலையில் தான் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்துள்ளது. இந்திய அளவில் ஒரு கட்சி சரி பாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது இதுவே முதல் முறை.

பெண்களின் விடுதலையே ஒரு நாட்டின் விடுதலைக்கு முதல்படி என்பதை மனதில் நிறுத்தி நாம் தமிழர் கட்சி தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது. வெற்றி வாய்ப்புக்களை அடுத்தடுத்து தக்கவைத்து தமிழகத்தின் பெரும் கட்சியாக நாம் தமிழர் உருவெடுக்கும் என்கிறார்கள் அவதானிகள்.