பெலியத்த – காங்கேசன்துறைக்கு இடையில் தினசரி ரயில் சேவையொன்றை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன இதை தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான சகல உபகரணத் தொகுதிகளும் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மாத்தறை வரை மட்டுபடுத்தப்பட்டிருந்த தெற்குக்கான ரயில் சேவை கடந்த 6ஆம் திகதி பெலியத்த வரை நீடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது வார இறுதியில் மாத்திரம் பெலியத்த – காங்கேசன்துறை வரை பயணிக்கும் ரயில் சேவை எதிர்வரும் நாட்களில் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படவுள்ளதென்றும் அவர் ரெரிவித்துள்ளார்.






