ஓட்டுப் போட வந்த இடத்தில் அஜித் செய்த செயல் குவியும் வாழ்த்துக்கள்

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்கள் ஓட்டினை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித் நடிகரகளில் முதல் ஆளாக தன்னுடைய மனைவி மற்றும் ஷாலியுடன் வந்து, தன்னுடைய வாக்கினை, சென்னை திருவான்மையூர் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

அஜித்தை நேரில் பார்ப்பதே பெரிது என்பதால், அவரை புகைப்படம் மற்றும் போட்டோக்கள் எடுப்பதற்கு ஊடகங்கள் குவிந்தன.

அப்போது ஓட்டுப் போடும் சற்று கூட்ட நெரிசல் ஏற்பட்டடதால், உடனே தல அங்கிருந்தவர்களை கையெடுத்து கும்பிட்டு தள்ளி செல்லும் படி கூறினார். அதுமட்டுமின்றி அங்கிருந்த தன் ரசிகர்களையும் கையெடுத்து கும்பிட்டார்.

இவ்வளவு பெரிய ஸ்டார், கையெடுத்து கும்பிட்டதைக் கண்ட இணையவாசிகள் தலயின் இந்த அடக்கம் தான் அவரை இந்தளவிற்கு கொண்டு சென்றுள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே போன்று தளபதி விஜய் நீலாங்கரையில் மக்களோடு மக்களாக நின்று தன் ஓட்டினை பதிவு செய்தார். சாதரணமாக வந்திருந்த விஜயைக் கண்ட அங்கிருந்த மக்கள், சிலர் அவரிடம் பேசிய போது, அவர் சாதரணமாக பேசினார்.

அதுமட்டுமின்றி குட்டி பாப்பா ஒருவர் அவரிடம் ஆட்டோ கிராப் வாங்கிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like