யாழில் வைத்தியசாலையில் பொலி­ஸார் அட்டகாசம்!! தாதி­யர்­கள் தலைதெறிக்க ஓடிய..

மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திய பலாலிப் பொலி­ஸார் வீதி­யில் வீழ்ந்து படு­கா­ய­ம­டைந்து தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட பின்­னர், மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளு­ட­னும் பொலி­ஸார் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர் என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரத்­தால் தெரி­விக்­கப்­பட்­டது.

சுன்­னா­கம் பகு­தி­நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இரு பொலி­சா­ரும் மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திச் சென்­ற­தோடு வீதி­யால் பய­ணித்த பெண் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரை­யும் மோதித்­தள்­ளி­னர்.

இதன்­போது வீழ்ந்த இரு பொலி­சா­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட சம­யம் இரு­வ­ரும் போதை­யின் உச்­சத்­தில் மருத்­து­வ­ம­னை­யில் இருந்த அலு­வ­லர்­க­ளு­டம் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இத­னை­ய­டுத்து அங்கு பணி­பு­ரி­யும் சிங்­க­ள­மொழி தாதி­யர்­கள் உதவ முற்­பட்­ட­போ­தும் அவர்­க­ளை­யும் தகாத வார்த்­தை­க­ளால் ஏசி­ய­தால் குறித்த தாதி­யர்­க­ளும் ஒதுங்­கிக் கொண்­ட­னர்.

இந்த விட­யம் மருத்­து­வ­ம­னை­யின் பணிப்­பா­ள­ரின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like