போட்டோ எடுக்கும் போது புதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான கடைசி திக் திக் நிமிடங்கள்

கேரள மாநிலத்தில் திருமணத்துக்கான பிரத்யேக போட்டோ சூட்டில் மணமக்கள் ஆற்றில் தவறி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருமணத்துக்கு புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள் தங்கள் தனித் தன்மையைக் காட்ட மணமக்களை வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த புது மணமக்களான திஜின் – சில்பாவை பம்பை நதிக்கு அழைத்துச் சென்ற புகைப்படக் கலைஞர் தோணி ஒன்றில் அமர வைத்து இலை ஒன்றை அவர்கள் தலைக்கு மேல் குடை போல் பிடித்துக் கொள்ளச் செய்து காதல் உணர்வுடன் புகைப்படம் எடுக்க முயன்றார். ஆனால் தோணி நிலை தடுமாறியதையடுத்து மணமக்கள் இருவரும் ஆற்றில் விழுந்தனர்.

அங்கிருந்தவர்களால் வீடியோ பதிவு செய்யப்பட்ட கடைசி கீழே விழப்போன காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like