வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்… அடுத்தடுத்து பரிதாபமாக இறந்துபோன தாய், மகன்கள்!

திருச்சியில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் தீ குளித்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி பன்னீர்செல்வம் என்பவருக்கு நாகராணி (30) என்கிற மனைவியும், குணா (10), சந்தோஷ் (7) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

நாகராணி வேலைக்கு செல்வது பன்னீர் செல்வத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வேலையைவிட்டு நிற்குமாறு பன்னீர் செல்வம் தன்னுடைய மனைவியிடம் சண்டையிட்டுள்ளார்.

இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் மனமுடைந்த நாகராணி வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து மகன்கள் குணா, சந்தோஷ் ஆகியோர் உடலிலும், தனது உடம்பிலும் மண்ணென்னை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

நாகராணியின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் வருவதை கேட்ட அக்கம்பக்கத்தினர் வேகமாக ஓடிச்சென்ற போது, மூன்று பேரும் உடலில் தீயுடன் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டு மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலத்த தீ காயங்களுடன் இருந்த மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குணா, நாகராணி, சந்தோஷ் என அடுத்தடுத்து மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like