விக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..?

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன.

இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

அப்படிப்பட்டவர் பெர்சனல் வாழ்க்கையிலும் பல சங்கடங்களை சந்தித்துள்ளார்.

இரண்டு காதல் முறிவுகளுக்கு பிறகு தற்போது விக்னேஷ் சிவனுடன் உறவில் உள்ளார். இந்த காதல் திருமணத்தில் முடியும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு வருகிறதாம். அதாவது விக்னேஷ் சிவனின் தாயார் இவர்கள் உடனடியாக திருமணம் செய்யவேண்டும் என விரும்புவதாகவும், ஆனால் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடிப்பதால் தற்போது இதுவே இவர்களுக்குள் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like