கொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா? பொலிஸார் அவசர அறிவிப்பு

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததது.

இந்நிலையில் இது உண்மைக்குப் புறமான போலியான தகவல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதுவொரு போலியான தகவல் எனவும் இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.

களனி, கிரிபத்கொட, ஜாஎல ஆகிய பகுதிகளில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியில் நிலையில், பொலிஸாரின் அவசர அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி விஷமிகள் இவ்வாறான போலியாக தகவல்களை பரப்பி வருவதாக தெரிய வருகிறது.