பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதியிடம் பேசிய மோடி,
இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருக்கிறோம்.

இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்போம். இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






