சரத் பொன்சேகாவின் கரங்களில் அந்த அமைச்சு இருந்தால்… இன்று இந்த நிலைமை வந்திருக்காது….

முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு சடடம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்கியிருந்தால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்விவகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்திற்கு குழும வேண்டிய அவசியம் மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பம் முதலே கோரி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு சில தேவையற்ற வகையில் அரசியல் லாபமீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.