நாடபூராகவும் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் (22) இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவிருந்தது. ஆனால் நேற்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட பாரிய வன்முறைச்சம்பவங்களால் இன்றும் நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாம் தவனைக்கான சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






