அவசர கால சட்டத்தினை முன்னிட்டு அனைத்து அதிவேக பாதைகளிலும் இலவசமாக பயணிக்க முடியும்

அனைத்து அதிவேக பாதைகளிலும் இலவசமாக பயணிக்க முடியுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதினை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எனவே, இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டின் அனைத்து அதிவேக பாதைகளிலும் இலவசமாக பயணிக்க முடியுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.