வரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள்! நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்

ஈஸ்டர் நாளான நேற்று முன் தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு பதிவாகியிருந்த நிலையில் அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு உயிரழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கதறியழுது உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்துடன் சடலங்கள் வரிசையாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like