நாளைய தினம் தொடர்பில் வட – கிழக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு!

வடக்கு கிழக்கு எங்கிலும் நாளை கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் போது பலர் கொள்ளப்பட்டனர். இதனால் நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பெரும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் துக்கநாள் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு கிழக்கு மக்கள் நாளைய தினம் கறுப்புக் கொடியினைப் பறக்கவிட்டு மக்களின் துயரத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கில் நாளை துக்க தினம்! – கூட்டமைப்பு அழைப்பு

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் நாளை புதன்கிழமைய வடக்கு – கிழக்கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”21ஆம் திகதி யேசு கிறிஸ்து உயிர்த்த நாளில் ஈஸ்ட்ர் கொண்டாட்ட நாளில் கொழும்பிலும், சுற்றுப் பிரதேசங்களிலும், மட்டக்களப்பிலும் தற்கொலைக் குண்டுதாரிகளினாலும் ஏனைய இடங்களில் மர்மமான முறைகளிலும் கிறிஸ்துவ தேவாலயங்களையும், பிரபல ஹோட்டல்களையும் குறிவைத்துப் பயங்கரக் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

நூற்றுக்கணக்கான இலங்கை மக்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கொல்லப்பட்டும், காயமடைந்தும் தீவிர சிகிச்சைக்கு ஆளாகியும் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, மனிதாபிமானமிக்க மனிதர்கள் ஒன்றாக ஒற்றுமையாக எம் கண்டனத்தை வெளிப்படுத்துவோம்.

இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம்.அவலத்தில் வீழ்ந்து இழப்புக்களால் துயருறும் மக்களுடன் நாம் அவர்கள் கண்ணீரில் கலந்து துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு 2019.04.24 ஆம் நாள் வடக்கு – கிழக்கில் துக்க நாளாகக் கடைப்பிடிப்போம்.

அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைக்கின்றோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.