கிளிநொச்சியில் பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

அவசரகால நிலை தொடர்பில் உணர்ந்து செயற்படுமாறு பளை பொலிஸார் கிளிநொச்சியில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி – பளை நகரில் இன்று வர்த்தகர்களை அழைத்து பொலிஸார் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் எட்டு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் அசாதாரண நிலையே தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நாட்டில் உள்ள நிலையை உணர்ந்து அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பணித்துள்ளனர்.

அத்துடன் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டங்கள், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதாவது அவதானித்தால் உடனடியாக தமக்கு தகவல் வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like