தற்கொலை தாக்குதல்கள் தொடரலாம்! அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல்கள், கிறிஸ்தவ, கத்தோலிக்க மற்றும் வெளிநாட்டவர்களை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என விமானப்படை புலனாய்வு பிரிவு கூறியுள்ளது.

மக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், அரச மற்றும் தனியார் சொத்துக்கள் இலக்கு வைத்து இந்த தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like