பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்க?

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாகவே ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவி விலகுமாறு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.