குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி

பொகவந்தலாவை – பொகவான தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிலர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில் , அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த குளவித் தாக்குதலில் மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இந்த குளவித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.