தாக்குதல் நடத்தும் முன் மனைவின் நலன் விசாரித்த தற்கொலை குண்டுதாரி!

தனது கணவர் கோழைத்தனமான இந்த தாக்குதலுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்பதை தான் முன்னரே அறிந்திருக்கவில்லை என சினமன் கிரான்ட் நட்சத்திர உணவகத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்ஷாப் அஹமட் என்ற பயங்கரவாதியின் மனைவி அக்ஷ்கான் அலாமிதின் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் டெய்லி மெயில் ஊடகத்திற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக அறிவித்தார்.

இதன்படி, கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது கணவரை கட்டுநாயக்க விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தோம்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலையில் தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு தனது நலன் தொடர்பில் விசாரித்தார்.

இவ்வாறானதொரு கோழைத்தனமான தாக்குதலுடன் தனது கணவர் தொடர்பு கொண்டுள்ளமை தொடர்பில் முன்னரே அறிந்திருந்தால் , அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருப்பேன்.

மேலும், சங்ரில்லா உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தனது கணவரின் சகோதரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அக்ஷ்கான் அலாமிதின் மேலும் கூறியுள்ளார்.