தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீது குளவி கொட்டியதில் பென் ஒருவர் மரணமானதுடன் ஒன்பது பெண் தொழிலாளர்கள் பாதிப்டைந்து வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலா பொலிஸ் பிரிவு பொகவான தோட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ராமன் வெள்ளையம்மா என்பவரே மரணமானார்.
பொகவான தோட்டத்தில் 08 ம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த போதே ( 24) பகல் 12 மணியளவில் குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது.
இதில் 10 பேர் பாதிப்படைந்த நிலையில் ஒருவர் மரணமடைந்ததுடன் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பொகவந்தலா வைத்தியலையில் சிகிச்சை பெற்று வருவதுடனே பெண்ணினே சடலம் வைத்தியலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.







