கொழும்பு தற்கொலை குண்டுத்தாக்குதல்! தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் கைது

தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட் ஷாஹிட் அப்துல்ஹக் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரையும் நாவலப்பிட்டியில் வைத்து, இன்று அதிகாலை இராணுவத்தினர் கைது செய்துளளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.