கிளிநொச்சி, பளை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பளை புலானாய்வுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கு இணங்க பொலிஸாரினால் குறித்த நபர் வன்னாங்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 10,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இருந்ததோடு அதில் 5 ஆயிரம் தாள்களும், ஒரு 5,000 தாளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.






