ஊரடங்கு வேளையில் பொலிஸாரை பிடித்து தள்ளிய இருவருக்கு ஏற்பட்ட கதி!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளை பொலிஸாரின் சேவைக்கு இடையூறு விளைவித்த இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து நாட்டில் இரவு வேளைகளில் பல பாகங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டிருந்தவேளை நல்லதன்னி பொலிஸாரின் சேவைக்கு இடையூறு விளைவித்த இருவரையும் எதிர்வரும் 07.05.2019 வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் ஜொக்சி அவர்களினால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டிருந்த வேளை 40 வயதுடைய பொகவந்தலாவ மோர கீழ்பிரிவு தோட்டத்தை சேர்ந்த நாகராஜ் கமல்ராஜ் என்ற சந்தேக நபரும் நல்லதன்னி கீழ்பிரிவு தோட்டபகுதியை சேர்நத 40 வயதுடைய பெரியசாமி சுபேந்திரன் ஆகிய இருவரும் நல்லதன்னியில் இருந்து கம்புளதன்ன பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை கடமையில் இருந்த நல்லதன்னி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு நபர்களையும் அழைத்து தற்பொழுது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டிருக்கிறது ஆகையால் வீதியில் நடமாட வேண்டாம் மென கூறியபோது கடமையில் இருந்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை பிடித்து தள்ளிவிட்டு சென்ற வேளையிலேயே இந்த இரண்டு சந்தேக நபர்களையும் நல்லதன்னி பொலிஸார் கைது செய்து 27.04.2019.சனிகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நல்லதன்னி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.