இன்று பிற்பகல் சோதனையில் 4 பதிவு செய்யப்படாத வேன்கள் , 32 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளுடன் நபர் கைது.
குருநாகல்- தெலியாகொன்ன பிரதேசத்தில் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பதிவு செய்யப்படாத 4 சிறிய வேன்களும், 32 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வான்கள் கடந்த வாரம் கொச்சிக்கடைப் பகுதியில் தாக்குதல் நடத்த பயன்படுத்த திட்டமிட்டிருந்த வானை ஒத்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து 2 வாள்களும் 4 அலைபேசிகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.







