உடன் அமுலாகும் வகையில் புதிய கட்டளைப் படைப்பிரிவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து பாதுகாப்பிற்கான கூட்டு நடவடிக்கைக்கான கட்டளைப் படைப்பிரிவு ஒன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்கு படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையின் Rear Admiral W.A.S.S Perera, விமானப்படையின் Air Vice Marshal W.L.R.P Rodrigo, பொலிஸ் உயர் அதிகாரி L.K.D Anil Priyantha ஆகியோர் இந்த கூட்டு நடவடிக்கைக்கான கட்டளைப் படைப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படவுள்ளனர்.

இந்தப் படைப்பிரிவு கொழும்பைத் தலைமையகமாக கொண்டு செயற்படவுள்ளதுடன், இதன் நடவடிக்கைகள் இன்றைய தினத்திலிருந்தே உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இந்த கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம் செயற்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.