யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
51ஆவது படைப்பிரிவினர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் இணைந்து இன்று அதிகாலை இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குருநகர் பகுதியில் உள்ள சுமார் 300 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
எனினும் இந்த சோதனையின் போது எந்தவிதமான பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






