கடந்த 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் பின்னர் குடா நாட்டில் பல்வேறு இடங்களில் இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இன்றைய தினம் யாழ். குடாநாட்டில் மக்கள் வழமை போன்று தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வழமைபோன்று சேவையில் ஈடுபடு கின்றன.
இதேவேளை, தனியார் வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வழமையான சேவைகள் இடம்பெறுகின்றன. நகரை அண்டிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத நிலையில் யாழ் கொழும்பு பஸ் சேவையும் வழமை போன்று இடம்பெற்றது.
இரவு புகையிரத சேவையும் இடம்பெற்றிருந்தது. கடந்த ஒரு வார காலமாக குடாநாட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில் நிலையில் யாழ் நகரில் வழமை போன்று மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட கூடியதாக உள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.






