யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நீண்ட நேரமாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் இருந்து நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதி மக்கள் அச்சமடைந்து வர்த்தக நிலையங்களை மூடி யாழ். பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்தபொலிஸார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
இருந்தும் மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வருகை தராததால் மோட்டார்சைக்கிள் இருக்கையினை கழற்றி பொலிஸ்நிலையம் எடுத்து சென்றதோடு உரிமையாளரை பொலிஸ் நிலையம் வரும்படி அறிவுறுத்துமாறும் மக்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர்.







