‘வெளியில் பச்சைத் தண்ணீர்கூட குடிக்க வேண்டாம்’: அரசியல் பிரமுகர்களிற்கு எச்சரிக்கை!

இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் சிலரை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக புலனாய்வுப்பிரிவு எச்சரித்துள்ளது.

முக்கிய அரசியல் தலைவர்களை தேவாலயங்கள், கோயில்கள், ஏனைய மத தலங்களிற்கு செல்வதை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாமல் அங்கு செல்ல வேண்டுமெனில் உலங்கு வானூர்திகளை பாவிக்கும்படி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிற்கு இந்த எச்சரிக்கை விசேடமாக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, அரசியல் முக்கியஸ்தர்கள், எம்.பிக்களிற்கும் புலனாய்வு பிரிவு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. பொதுநிகழ்வுகள், வணக்கஸ்தலங்களிற்கு செல்ல வேண்டாமெனவும், பொது இடங்களில் ஆதரவாளர்களால் கையளிக்கப்படும் உணவு, குடிபானங்களை உட்கொள்ள வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.